சாத்தான்குளம் மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் ₹93 லட்சம் கடனுதவி வழங்கல்

சாத்தான்குளம், டிச. 13: கடன் மேளாவையொட்டி சாத்தான்குளம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் ₹93 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது. முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சாத்தான்குளம் கிளை சார்பில் கடன் மேளா மற்றும் நிரந்தர வைப்பு நிதி சேமிப்பு முகாம் நடந்தது. தலைமை வகித்த தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் முதன்மை வருவாய் அலுவலர் விஜயன், ₹93 லட்சம் மதிப்பிலான கடனுதவிகள் வழங்கினார். முகாமிற்கு உதவி பொது மேலாளர் பழனியாண்டி, நிர்வாகப் பிரிவு மேலாளர் ஜோசப் உதயகுமார் முன்னிலை வகித்தனர். சாத்தான்குளம் கிளை மேலாளர் மீனாட்சி சுந்தரம் வரவேற்றார். இதில் சமுதாய வள பயிற்றுநர் டெய்சி, ஓய்வு பெற்ற ஆசிரியர் முருகன், பெமினா முகாமின் நோக்கத்தை விளக்கிப் பேசினர்.

முகாமில் 8 மகளிர் சுய உதவிக் குழுவினர், கணவரை இழந்தோர், மாற்றுத்திறனாளிகள், சிறு வணிகர்கள் ஆகியோருக்கு ₹93 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது. மேலும் வாடிக்கையாளர்களிடம் இருந்து ₹ 7 லட்சம் வரை வைப்புத்தொகை பெறப்பட்டது. இதில் திமுக நகரச் செயலாளர் மகாஇளங்கோ, சாத்தான்குளம் வட்டார மகளிர் சுய உதவிக்குழு பொறுப்பாளர், ஜோன்குமாரி, சாத்தான்குளம் பேரூராட்சி சுய உதவிக்குழு பயிற்றுநர் டெய்சிராணி, தலைமையக பணியாளர் காளிமுத்து, வங்கி பணியாளர்கள் முருகன், கிருஷ்ணகுமார், முத்துக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். வங்கி கிளை காசாளர் மீனாட்சி நாதன் நன்றி கூறினார்.

The post சாத்தான்குளம் மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் ₹93 லட்சம் கடனுதவி வழங்கல் appeared first on Dinakaran.

Related Stories: