திருமங்கலத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா தனியார் வேலைவாய்ப்பு முகாம் 132 பேருக்கு பணி நியமன ஆணை

 

திருமங்கலம், டிச.10: கலைஞர் நூற்றாண்டு விழாவினையொட்டி, திருமங்கலத்தில் நடைபெற்ற தனியார் வேலை வாய்ப்பு முகாமில், 132 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, மாவட்ட அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நேற்று திருமங்கலம் பிகேஎன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரையிலும், ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், பார்மசி, பொறியியல் உள்ளிட்ட பல்வேறு தொழில்கல்வி படித்தவர்களும் இந்த முகாமில் பங்கேற்றனர்.

இந்த சிறப்பு முகாமில் 18 வயது முதல் 40 வயதிற்குட்பட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் சுமார் 75 நிறுவனங்கள் பங்கேற்று ஊழியர்களை தேர்வு செய்தனர். தனியார் துறை வேலைவாய்ப்பு சிறப்பு முகாமினை உதவிதிட்ட அலுவலர்கள் ஜோசப், ஜெயராஜ் மற்றும் செந்தில்குமார் ஒருங்கிணைத்து நடத்தினர். இந்த முகாம் வாயிலாக 132 பேருக்கு வேலை கிடைத்தது. அவர்களுக்கான பணி நியமன ஆணை உடனடியாக வழங்கப்பட்டது. மேலும் 248 பேர் பல்வேறு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்க பணியாளர்கள், மற்றும் வட்டார இயக்க மேலாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு முகாமினை நடத்தினர்.

The post திருமங்கலத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா தனியார் வேலைவாய்ப்பு முகாம் 132 பேருக்கு பணி நியமன ஆணை appeared first on Dinakaran.

Related Stories: