திருவள்ளூர் மாவட்டத்தில் புயல் பாதித்த குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்: அமைச்சர்கள் வழங்கினர்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் புயல் பாதித்த குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை அமைச்சர்கள் வழங்கினர். வடகிழக்கு பருவமழை மற்றும் மிக்ஜாம் புயல் காரணமாக ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி வட்டங்களுக்குட்பட்ட கச்சூர், நேமலூர், மாதர்பாக்கம், கீழ்முதலம்பேடு ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட 800 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கும் நிகழ்ச்சி கச்சூரில் நடந்தது. டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ தலைமை தாங்கினார்.

கலெக்டர் த.பிரபு சங்கர், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் என்.ஒ.சுகபுத்திரா, மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஆர்.காந்தி, மூர்த்தி ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான அரிசி, மளிகை பொருட்கள், கோரைப்பாய், போர்வை, தலையணை, வேஷ்டி, சேலை உள்பட பல்வேறு நிவாரண பொருட்களை வழங்கினர். இதில் எஸ்.சந்திரன் எம்எல்ஏ, வட்டாட்சியர் வாசுதேவன், ஒன்றிய திமுக செயலாளர் பொன்னுசாமி, ஒன்றிய நிர்வாகிகள் பாலாஜி, ராகவன், சீனிவாசன், கஜேந்திரன், நாகராஜ், வேல்முருகன், பாபு, வேலு, ரஞ்சித் மண்டல துணை வட்டாட்சியர் தேன்மொழி, வருவாய் ஆய்வாளர் தனபால் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் அடுத்த பூண்டி ஒன்றியம், எல்லப்பநாயுடு பேட்டை ஊராட்சி காந்திகிராமம், புதூர், பட்டரை பெருமந்தூர் ஊராட்சி வரதாபுரம், குன்னவலம், கடம்பத்தூர் ஒன்றியம், வெண்மணம்புதூர் ஆகிய ஊராட்சிகளில் வசித்து வரும் 600 இருளர் இன குடும்பங்கள் வெள்ளம், மழையால் பாதிக்கப்பட்டு பள்ளி வளாகங்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு அமைச்சர் ஆர்.காந்தி தனது ஏற்பாட்டில் தலா 5 கிலோ அரிசி, எண்ணெய், மளிகை பொருட்கள், கோரைப்பாய், போர்வை, வேஷ்டி, சேலைகள் உள்பட பல்வேறு நிவாரண பொருட்களை வழங்கினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார், எம்எல்ஏக்கள் எஸ்.சந்திரன், வி.ஜி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் வட்டாட்சியர் சுரேஷ்குமார், ஒன்றிய செயலாளர் தா.கிறிஸ்டி, ஒன்றிய குழு துணைத் தலைவர் மகாலட்சுமி மோதிலால், இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் தா.மோதிலால், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜி.சிவகுமார், இரா.ரவி, மாவட்ட கவுன்சிலர்கள் சிவசங்கரி உதயகுமார், சரஸ்வதி சந்திரசேகர், வருவாய் ஆய்வாளர் இளமதி, கிராம நிர்வாக அலுவலர் அண்ணாமலை, கே.ஆர்.பாபு நாயுடு, மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பொன்னேரி: பொன்னேரி தொகுதிக்குட்பட்ட பழவேற்காடு, வஞ்சிவாக்கம், போலாச்சி அம்மன் குளம், ஆண்டார் மடம், மீஞ்சூர், கல்பாக்கம், நந்தியம்பாக்கம், அத்திப்பட்டு, குளத்து மேடு, செஞ்சி அம்மன் நகர், பிரளயம் பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காமல் பெரிதும் அவதிப்பட்டனர்.

இதையடுத்து, வஞ்சிவாக்கம், ஆண்டார்மடத்தில் உள்ள புயல் பாதுகாப்பு மையம் மற்றும் மீஞ்சூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்திலும் தங்க வைக்கப்பட்டிருந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடி மக்களுக்கு உணவு, மருத்துவ உதவி மற்றும் நிவாரண உதவிகள் உள்ளிட்டவற்றை அமைச்சர் ஆர்.காந்தி, கலெக்டர் பிரபுசங்கர், ஜெயக்குமார் எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் துரை சந்திரசேகர், டி.ஜெ.கோவிந்தராஜன் ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியில் பொன்னேரி தாசில்தார் மதிவாணன், மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜ், குமார், மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் வல்லூர் எம்எஸ்கே.ரமேஷ் ராஜ், திமுக பொறுப்பாளர்கள் அன்புவாணன், கோளூர் கதிரவன், மீஞ்சூர் நகர செயலாளர் தமிழ் உதயன், வல்லூர் தமிழரசன், அத்திப்பட்டு காங்கிரஸ் வட்டார தலைவர் புருஷோத்தமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருவொற்றியூர்: திருவொற்றியூர், மணலி சின்னசேக்காடு ஆகிய பகுதிகளின் பல இடங்களில் பாதிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை பாதுகாப்பு படையினர் படகுகள் மூலம் மீட்டு பாதுகாப்பாக தங்க வைத்தனர்.  பல இடங்களில் மழைநீர் வடிந்ததால் மின்சாரம், குடிநீர் போன்றவை சீராகியுள்ளது. திருவொற்றியூரின் மேற்கு பகுதிகளில் தாழ்வு பகுதிகளான கார்கில்நகர், வெற்றிநகர், சத்தியமூர்த்தி நகர், ஜோதிநகர், கலைஞர் நகர், போன்றவற்றில் மழைநீர் வற்றாததால் மக்கள் சிரமப்படுகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதியில் நிவாரண பணிகளை மேற்கொள்ளவும், மழைநீரை அகற்றும் பணியில், அமைச்சர்கள் சிவசங்கரன், மதிவேந்தன், எம்பிக்கள் கலாநிதிவீராசாமி, ராஜேஷ்குமார், கே.பி.சங்கர் எம்எல்ஏ, மண்டல குழு தலைவர்கள் தி.மு.தனியரசு, ஏ.வி.ஆறுமுகம் உள்ளிட்ட அதிகாரிகள் முகாமிட்டு 300க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே முதல்வரின் உத்தரவின் பேரில் 20 ஆயிரம் பேருக்கு மளிகைபொருட்கள், பாய், பெட்ஷீட், லுங்கி, பால் போன்ற நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பு முதல் கட்டாக வழங்கப்பட்டது.

The post திருவள்ளூர் மாவட்டத்தில் புயல் பாதித்த குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்: அமைச்சர்கள் வழங்கினர் appeared first on Dinakaran.

Related Stories: