மழை ஓய்ந்த பிறகு சேதமான சாலைகள் சரிசெய்யப்படும்: அமைச்சர் கே.என்.நேரு உறுதி

சென்னை: சென்னை கோடம்பாக்கம் பராங்குசபுரம் பகுதியில் மழை பாதிப்புகள் மற்றும் சென்னை மாநகராட்சி தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அமைச்சர் கே.என்.நேரு அளித்த பேட்டி: பராங்குசபுரம் பகுதியில் 2வது, 3வது தெருவில் அரை அடி மட்டும்தான் தண்ணீர் தேங்கி உள்ளது. நீரை வெளியேற்றும் பணி நடக்கிறது. இந்த பகுதியில் உள்ள ரயில்வே கல்வெட்டை பெரிதாக்க கொஞ்ச நாளாகும் என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே கல்வெட்டை மாற்றாத வரை மோட்டரை வைத்துதான் தண்ணீரை வெளியேற்றியாக வேண்டும். சென்னையில் வெள்ள நீரை வெளியேற்ற நிரந்தரமாக மழை நீர் வடிகால் தான் தீர்வு. தற்காலிகமாக தான் 925 மோட்டார் பம்புகள் உள்ளன. முகத்துவாரத்தில் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது. தண்ணீருக்கும் – தாருக்கும் விரோதம்: சென்னையில் தண்ணீர் நின்றாலே சாலை பள்ளம் ஆகிவிடுகிறது. தண்ணீர் நிற்கும் சாலைகளில் பார்த்து தான் செல்ல வேண்டும். மழை நின்ற பிறகு சாலைகள் சரி செய்து தரப்படும். சேதமாக உள்ள சாலைகளில் எச்சரிக்கை பலகை வைக்கச் சொல்லியிருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், துணை மேயர் மகேஷ் குமார், மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

The post மழை ஓய்ந்த பிறகு சேதமான சாலைகள் சரிசெய்யப்படும்: அமைச்சர் கே.என்.நேரு உறுதி appeared first on Dinakaran.

Related Stories: