மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகள் கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடி பிளாஸ்டிக் விழிப்புணர்வு

 

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகள் கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடியும், ஆடியும் பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலா பயணிகள் கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடியும், ஆடியும் உற்சாகமாக கிறிஸ்துமஸ் கொண்டாடி மகிழ்ந்தனர். அங்கு, பிளாஸ்டிக் தவிர்த்து மூங்கில் குச்சியை கொண்டு வண்ண விளக்குகளால் கிறிஸ்துமஸ் மரம் அழகுர அலங்கரிக்கப்பட்டு இருந்தது. கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்ட ஒருவருடன் சுற்றுலா பயணிகள், சிறுவர்கள், குழந்தைகள் பலரும் கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடி மகிழ்ந்தனர்.

அந்த, ஓட்டலில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகளின் குழந்தைகள் பலரும் புத்தாடைகள் அணிந்தும், கையில் மெழுகுவர்த்தி ஏந்தியும் கிறிஸ்துமஸ் பாடல்களுக்கு ஏற்ப நடனம் ஆடினர். அட்வான்ஸ் கிறிஸ்துமஸ் கொண்டாடி, உற்சாகமாக காணப்பட்ட பல பயணிகளும் செல்பி எடுத்து மகிழ்ந்ததை காண முடிந்தது. அவர்களுக்கு, ஓட்டல் நிர்வாகம் சார்பில் இனிப்புகள், கேக்குகள் வழங்கப்பட்டன. முன்னதாக, பிளாஸ்டிக் கொண்டு கிறிஸ்துமஸ் மரம் உருவாக்காமல், மாற்றாக மூங்கில் குச்சிகள் மூலம் கிறிஸ்துமஸ் மரம் ஏற்படுத்தி மின் விளக்குகள் மூலம் அதனை அலங்கரித்து பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

The post மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகள் கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடி பிளாஸ்டிக் விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: