கரிசல் இலக்கியத்தையும் கரிசல் பண்பாட்டையும் நமது வருங்கால சந்ததிகளுக்கு அறிந்துகொள்ள கரிசல் இலக்கியங்கள் பற்றிய ஆர்வத்தை மாணவர்களிடையே ஏற்படுத்துவதும் கரிசல் இலக்கிய படைப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் புதிய படைப்பாளர்களை உருவாக்குவதும் கரிசல் இலக்கிய திருவிழாவின் நோக்கம்.கரிசல் இலக்கிய எழுத்தாளர்கள், தமிழறிஞர்கள் பங்கேற்கும் சொற்பொழிவுகளும், எழுத்தாளர்களும், கல்லூரி மாணவர்களும் கலந்துரையாடும் நிகழ்வுகளும் கரிசல் இலக்கியங்கள் மற்றும் படைப்பாளர்கள் பற்றிய முக்கிய குறிப்புகள் அடங்கிய கண்காட்சியும் நடைபெற உள்ளது.
கரிசல் மண்ணின் பண்பாட்டை வெளிப்படுத்தும் தொழில் வளம், விவசாயம், உணவு, பழக்கவழக்கங்கள், வழிபாடு, நம்பிக்கைகள் உள்ளிட்ட பண்பாட்டுக் கூறுகளை காட்சிப்படுத்தும் விதமான புகைப்படங்களை கலெக்டரின் டிவிட்டர் சமூக வலைத்தளமான @VNRCollector-க்கு Tag செய்யலாம் அல்லது photocontestkarisal@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். சிறந்த புகைப்படங்களுக்கு முதல் பரிசு ரூ.20 ஆயிரம், 2வது பரிசு ரூ.15 ஆயிரம், 3ம் பரிசு ரூ.10 ஆயிரம், ஆறுதல் பரிசாக 5 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. ஆய்வாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் கரிசல் மண்ணின் பண்பாட்டை வெளிப்படுத்தும் புகைப்படங்ளை அனுப்பி வைக்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post கரிசல்மண் பண்பாட்டை வெளிப்படுத்தும் அசத்தலான புகைப்படம் எடுத்தால் பரிசு appeared first on Dinakaran.
