ஏர்வாடியில் அலங்கார நுழைவாயில்

ஏர்வாடி,டிச.2: நெல்லை மாவட்டம் ஏர்வாடி பேரூராட்சியில் ரூ.4.5 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு நுழைவாயில்கள் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி வளர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்டிருந்தது. இதன் திறப்பு விழா நடந்தது. நுழைவாயில்களை நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு ஏர்வாடி பேரூராட்சி தலைவர் தஸ்லிமா அயூப்கான் தலைமை வகித்தார் . ஏர்வாடி பேரூர் திமுக செயலாளர் அயூப்கான், நிர்வாகஅதிகாரி சாஜன் மேத்யூ, இன்ஜினியர் பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் திமுக செயற்குழு உறுப்பினர் சித்திக், ஒன்றிய செயலாளர் செல்வ கருணாநிதி, மாவட்ட துணைச்செயலாளர் நம்பி, ஏர்வாடி பேரூராட்சி உறுப்பினர்கள் மீரா சாகிப், சந்திரசேகர், அருள்செல்வன், பால சரவணன், பேரூராட்சி துணைத் தலைவர் ஏசி பீர் முகமது, தஸ்லிமா, இசக்கியம்மாள், சாபிரா, செய்யது அலி பாத்திமா, ஹலிமா, ஜன்னத், மாவட்ட மீனவர் அணி ஜார்ஜ், மாவட்ட பிரதிநிதிகள் கல்வத் சாஜித், ஒன்றிய பிரதிநிதி சக்திவேல், அபுல்ஹசன்உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஏர்வாடியில் அலங்கார நுழைவாயில் appeared first on Dinakaran.

Related Stories: