டி.சவேரியார்புரத்தில் மூதாட்டியிடம் 5 பவுன் பறித்த வாலிபர் கைது

தூத்துக்குடி, டிச.2: டி.சவேரியார்புரம் பகுதியில் மூதாட்டியிடம் 5 பவுன் செயின் பறித்தவரை போலீசார் கைது செய்து நகையை மீட்டனர். தூத்துக்குடி டி.சவேரியார்புரத்தை சேர்ந்த சாமி மனைவி பாப்பா(64). நேற்று முன்தினம் இங்குள்ள சமுதாயக்கூடம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு சைக்கிளில் வந்த மர்மநபர், பாப்பா அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினை பறித்து சென்றார். இதுகுறித்து பாப்பா அளித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் எஸ்ஐ மரியஇருதயம், எஸ்எஸ்ஐ சுடலைமுத்து மற்றும் முதல் நிலை காவலர் சத்ரியன் ஆகியோர் அடங்கிய போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் ஜேசுபாலன்(42), பாப்பாவிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து வழக்கு பதிந்து ஜேசுபாலனை கைது செய்த போலீசார், ₹2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 5 பவுன் தங்க செயினை பறிமுதல் செய்தனர்.

The post டி.சவேரியார்புரத்தில் மூதாட்டியிடம் 5 பவுன் பறித்த வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: