இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48 திட்டத்தில் 2 லட்சம் பேர் உயிர், உடலுறுப்பு காக்கப்பட்டுள்ளன: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் பதிவு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
2008ம் ஆண்டிலேயே 108 ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்கினார் தமிழினத் தலைவர் கலைஞர் இந்தியாவிலேயே அதிகளவில் மக்கள் தொகைக்கேற்ப ஆம்புலன்ஸ் சேவைகள் தமிழ்நாட்டில் இருந்தாலும், சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகமாக இருந்தன. அதனைக் குறைக்க, ‘இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48’ திட்டத்தைக் கடந்த 2021 டிசம்பரில் அறிமுகப்படுத்தினேன்.

இந்த இரண்டாண்டுகளில் நேற்று 2 லட்சமாவது பயனாளிக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பயனாளிகள் என்பதை விட 2 லட்சம் பேர்களின் உயிர்களும் உடலுறுப்புகளும் காக்கப்பட்டுள்ளன என்பதே சரி! சாலை விதிகளைப் பின்பற்றிப் பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்வோம்! குடும்பங்களில் மகிழ்ச்சியை நிலைபெறச் செய்வோம்.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

The post இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48 திட்டத்தில் 2 லட்சம் பேர் உயிர், உடலுறுப்பு காக்கப்பட்டுள்ளன: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் பதிவு appeared first on Dinakaran.

Related Stories: