செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சியில் வாங்க கூடிப் பேசுவோம் நிகழ்ச்சி: மக்களை சந்தித்து குறைகள் கேட்பு

 

சிவகாசி, நவ.28: செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சியில் வாங்க கூடிப் பேசுவோம் என்ற மக்களை சந்திக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. சிவகாசி ஒன்றியம் செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சியிலுள்ள வார்டுகளில் புதிய முயற்சியாக மக்களை நேரில் சந்தித்து பிரச்சினைகளை கேட்டு தீர்வு காணும் வகையில் ‘வாங்க கூடிப் பேசுவோம்’ எனும் நிகழ்ச்சி என்.ஜி.ஒ காலனி 14 வது தெருவில் முதன் முறையாக தொடங்கப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் மாறன்ஜி மற்றும் முத்துபாரதி முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் பெண்கள் உட்பட 80 பேர் கலந்து கொண்டனர். மக்களின் கோரிக்கைகளுக்கும் குறைகளுக்கும் விளக்கமளித்து ஊராட்சி மன்ற தலைவர் பேசினார். மின் விளக்கு, குடிநீர், வாறுகால், குப்பை சேகரிப்பு உட்பட பல்வேறு விபரங்கள் விவாதிக்கப்பட்டன. மக்கள் மழைக்கால நோய்களிலிருந்து தற்காத்து கொள்ள விழிப்புணர்வு ஆலோசனை வழங்கப்பட்டது. சிரிப்பு யோக பயிற்சியை கிரிதரன் வழங்கினார். மாரிச்சாமி நன்றி கூறினார். அடுத்துவரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மாலையில் செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சியிலுள்ள வார்டுகளில் இது போன்ற ‘வாங்க கூடிப் பேசுவோம்’ நிகழ்ச்சி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சியில் வாங்க கூடிப் பேசுவோம் நிகழ்ச்சி: மக்களை சந்தித்து குறைகள் கேட்பு appeared first on Dinakaran.

Related Stories: