ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழந்தது. பர்கூர் தம்புரெட்டியில் புட்டன் என்பவர் மக்காச்சோள பயிர்களை பாதுகாக்க சட்டவிரோத மின்வேலி அமைத்துள்ளார். மக்காச்சோள பயிர்களை சாப்பிட வந்த ஆண் யானை ஒன்று மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது.