போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியை கைவிலங்கு போட்டு அழைத்து செல்லவில்லை: நீலகிரி எஸ்பி விளக்கம்

ஊட்டி: ஊட்டியில் போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியை கைவிலங்கு போட்டு அழைத்து செல்லவில்லை என நீலகிரி மாவட்ட எஸ்பி விளக்கம் அளித்தார். ஊட்டியை சேர்ந்த 15 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் திருமணம் செய்து அழைத்து சென்றுவிட்டதாக சிறுமியின் தாயார் புகார் கூறினார். இதைத்தொடர்ந்து கடந்த 2ம் தேதி ஊட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக அந்த சிறுமியை வாக்குமூலம் பெறுவதற்காக ஊட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்து கோத்தகிரி நீதிமன்றத்திற்கு கடந்த 7ம் தேதி பெண் காவலர் ஒருவர் அழைத்து சென்றுள்ளார். அப்போது சிறுமியை கைவிலங்கு போட்டு பெண் காவலர் அழைத்து சென்றதாக சிறுமியின் தாய் ஊட்டியில் உள்ள எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

இது குறித்து எஸ்பி சுந்தரவடிவேல் கூறுகையில், ‘‘புகார் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டோம். சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தோம். ஆனால், அந்த சிறுமியை பெண் காவலர் கைவிலங்கு போட்டு அழைத்து சென்றதற்கான எவ்வித தடயமும் இல்லை. காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டதில், சம்பவத்தன்று கைவிலங்கு எடுத்துச் சென்றதற்கான எந்தவித பதிவுகளும் இல்லை. முழுமையான விசாரணை மேற்கொண்டதில், இந்த குற்றச்சாட்டு பொய் என தெரிய வந்ததுள்ளது. சிறுமிக்கு கைவிலங்கு போட்டு அழைத்து சென்றதாக வெளியாகும் வீடியோக்கள் தவறானவை’’ என்றார்.

The post போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியை கைவிலங்கு போட்டு அழைத்து செல்லவில்லை: நீலகிரி எஸ்பி விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: