நான் மன்னிப்புக் கேட்கக் கூடியவனா?; எரிமலை குமுறினால் எல்லோரும் ஓடி விடுவீர்கள்: மன்சூர் அலிகான் பேட்டி

சென்னை: நான் மன்னிப்புக் கேட்கக் கூடியவனா?; எரிமலை குமுறினால் எல்லோரும் ஓடி விடுவீர்கள் என மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். நடிகர் மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷாவுடன் இணைந்து லியோ படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் அவர் திரிஷா பற்றி பேசியது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் என்ன பேசினார் என்றால் ” லியோ படத்தில் த்ரிஷாவுடன் நடிக்கிறோம் என்றவுடன் ரொம்பவே சந்தோஷபட்டேன். கண்டிப்பா பெட் ரூம் சீன் எல்லாம் இருக்கும் நடித்துவிடலாம் ” என்பது போல சற்று கொச்சையாக பேசி இருந்தார். அவர் பேசியதற்கு நடிகை த்ரிஷா ” சமீபத்தில் மன்சூர் அலி கான் என்னைப் பற்றி கேவலமாக பேசிய வீடியோ பார்த்தேன்.

அவர் பேசியதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் இது பாலியல், அவமரியாதை, பெண் வெறுப்பு, வெறுப்பு மற்றும் மோசமான அவர் எண்ணத்தை காட்டுகிறது. அவர் ஆசைப்படலாம் ஆனால் நான் அவரைப் போன்ற ஒருவருடன் திரையில் நடித்ததில்லை என்பதற்கு திரைத்துறையினருக்கு நன்றி கூறுகிறேன். இனிமேல் அவருடன் நான் நடிக்க மாட்டேன்” என கூறினார். த்ரிஷா இப்படி பதிவு போட்டவுடன் திரைபிரபலங்கள் பலரும் மன்சூர் அலிகான் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்ய டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு பிறபித்த நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் பேசியதாவது,

மன்சூர் அலிகான் மீண்டும் மீண்டும் சர்ச்சை பேச்சு

பொண்ணு மாப்பிள்ளை போல் என் போட்டோவையும், திரிஷா போட்டோவையும் போட்டு செய்தி வெளியிட்டனர். இந்த செய்தி ஹாலிவுட் வரைக்கும் போய்விட்டது; எல்லோரும் போன் செய்து கேட்கிறார்கள். சங்கம் அளித்த கண்டன அறிக்கையை 4மணி நேரத்தில் வாபஸ் பெற வேண்டும்.

திரிஷா எனக்கு நன்றி சொல்ல வேண்டும்

திரிஷாவை நான் பாராட்டி பேசியதற்காக அவர் எனக்கு நன்றிதான் சொல்ல வேண்டும். நடிகை திரிஷா குறித்து நான் தவறாக பேசவே இல்லை.

மன்னிப்பு கேட்க வேண்டுமா?: நான் எரிமலை

நான் மன்னிப்புக் கேட்கக் கூடியவனா?; எரிமலை குமுறினால் எல்லோரும் ஓடி விடுவீர்கள். நடிகை திரிஷா குறித்து முகம் சுளிக்கும் வகையில் பேசியது சர்ச்சையான நிலையில் மன்சூர் அலிகான் பேட்டி. நான் பேசியது தொடர்பாக நடிகர் சங்கம் விளக்கம் கேட்கவே இல்லை. த்ரிஷா விவகாரத்தில் நடிகர் சங்கம் மிகப்பெரிய தவறை செய்துள்ளது. மக்களுக்கு என்னைப் பற்றி நன்கு தெரியும்; தமிழ்நாடே என் பக்கம் இருக்கிறது.

செய்தியாளர்களிடம் டென்ஷன் ஆன மன்சூர் அலிகான்

செய்தியாளர்களின் கேள்விக்கு மன்சூர் அலிகான் பதில் தராமல் அவர்களை நோக்கி டென்ஷன் ஆனதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

The post நான் மன்னிப்புக் கேட்கக் கூடியவனா?; எரிமலை குமுறினால் எல்லோரும் ஓடி விடுவீர்கள்: மன்சூர் அலிகான் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: