* செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): முதல்வர் கொண்டு வந்த தனி தீர்மானத்தை காங்கிரஸ் முழு மனதுடன் ஆதரிக்கிறது. திராவிட மாடல் ஆட்சியை கொச்சைப்படுத்தி கவர்னர் பேசுகிறார். அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய கவர்னர், அரசியலமைப்புச் சட்டத்தை எப்படி சிதைக்க முயற்சி செய்ய முடியும் என்பது தான் எங்களுடைய கேள்வி. முதல்வர் கொண்டு வந்த தனித் தீர்மானத்தை ஆதரித்து வரவேற்கிறோம்.
* ஜி.கே.மணி (பாமக): தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக நிறைவேற்றப்படக்கூடிய சட்டத்திருத்தங்களுக்கு முட்டுக்கட்டைப் போடுகிறார் என்று சொன்னால், இவர் தமிழ்நாட்டிற்கு தேவையா?. பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வர் தான் இருக்க வேண்டும். கவர்னரின் போக்கை ஏற்க
முடியாது.
* சிந்தனைச்செல்வன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி): தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பியிருந்த சட்ட மசோதாக்களில் ஒரு ஓட்டையைக் கூட கவர்னரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் தான், ஒன்றரை ஆண்டுகள் கழித்து அதை ஏற்க மனமில்லாமல் நிராகரித்து இருக்கிறார். முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி முழு மனதோடு ஆதரிக்கிறது. பல்கலைக்கழகங்களுக்கு கவர்னர் வேந்தராக இருக்கக்கூடாது என்ற கொள்கை முடிவை அரசு எடுக்க
வேண்டும்.
* நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி): முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முழு மனதோடு ஆதரிக்கிறது. இந்தியாவில் இவர்போல எந்த கவர்னரும் இல்லை. இனிமேலும் இவரை அனுமதிக்க கூடாது. கவர்னருக்கு இது இறுதி
எச்சரிக்கை.
* ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்டு கட்சி): கவர்னர் தொடர்ந்து மாநில அரசுக்கு எதிராக பிடிவாதப் போக்கை கவர்னர் கடைபிடித்து வருகிறார். கவர்னரை ஒன்றிய அரசு திரும்பப்பெற வேண்டும். பல மசோதாக்களை முடக்கி வைத்தது மக்கள் விரோத செயல்.
* சதன் திருமலைக்குமார் (மதிமுக): சட்டசபையில் நிறைவேற்றிய 10 தீர்மானங்களை கவர்னர் கிடப்பில் போட்டு விட்டு இப்போது திருப்பி அனுப்பி இருப்பது நம்முடைய சட்டசபையே மட்டுமின்றி தமிழ்நாட்டில் வாழும் மக்களை அவமானப்படுத்தியிருக்கிறார். அரசியலமைப்பு சட்டப்படி முதல்வர் தலைமையில் இருக்கும் அமைச்சரவை முடிவை ஏற்று செயல்படுவதே கவர்னரின் கடமை. அதை செய்ய தவறிய கவர்னர் பதவி விலகி ஓட வேண்டும்.
* ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி): அமைச்சரவையின் ஆலோசனைப்படித் தான் கவர்னர் செயல்பட வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதிக்கத் தெரியாதவர் கவர்னர் ஆர்.என்.ரவி. கவர்னர் பதவியே இனி தமிழ்நாட்டிற்கு தேவையில்லை. நமது மாநில அரசாங்கத்தின் சார்பாக முதல்வர் இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடி இருப்பது வரவேற்கத்தக்கது.
* ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி): கவர்னர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு கட்டுப்பட்டவர். உச்ச நீதிமன்றமே காலவரையறை நிர்ணயித்து, கவர்னர்கள் மசோதாக்களை இதற்குமேல் வைத்துக் கொள்ளக்கூடாது என்பதை முடிவு செய்யும் என்று நம்புவோம்.
* வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி): 10 மசோதாவை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதால் கவர்னருக்கு ஒப்புதல் அளிப்பதை தவிர வேறு வழியில்லை. கவர்னர் ஆர்.என். ரவி தமிழ்நாட்டை விட்டு வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை. இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
The post மக்களின் உணர்வுகளை மதிக்க தெரியாத கவர்னர் தமிழ்நாட்டுக்கு இனி தேவையில்லை: முதல்வர் கொண்டு வந்த தனி தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்து எம்எல்ஏக்கள் பேச்சு appeared first on Dinakaran.
