சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக இலவச ஆம்புலன்ஸ் வாகனம்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

சென்னை: சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக இலவச ஆம்புலன்ஸ் வாகனத்தை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் கொடியசைத்து  தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக இலவச ஆம்புலன்ஸ் வாகனம் தொடங்கி வைக்கப்படுகிறது. சபரி மலை அடிவாரத்திற்கு செல்லும் இந்த ஆம்புலன்ஸ் வாகனம், இரண்டு மாத காலத்திற்கு சபரிமலைக்கு வரும் தமிழக பக்தர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அவசர உதவிக்கும் பயன்படும். ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஒரு மருத்துவர் 3 செவிலியர் உட்பட ஒரு மருத்துவ குழு சிகிச்சைக்காக இருக்கும். இது தொடர்பாக  முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் உதவி மையம் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை உதவிகள் பெறுவதற்கு ஏதுவாக அமையும். இந்து சமய அறநிலையத்துறை கல்லூரி தொடர்பான வழக்கில் நீதிமன்ற உத்தரவுகளை முழுமையாக பின்பற்றுவோம். சட்டத்தின்படி நடைபெறும் ஆட்சி தமிழகத்தின் முதல்வர் தலைமையில் நடைபெற்று வருகிறது. சபரிமலை செல்பவர்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்த உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் சபரிமலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் தடுப்பூசி முகாம்கள் திறக்கப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் அந்த முகாம்களை பயன்படுத்தி சான்றிதழ்களை வாங்கி கொள்ளலாம். சென்னையை சிங்கப்பூர் ஆக்கினோம் என தேர்தல் சமயத்தில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கூறினார். ஆனால் பருவமழைக்கு சென்னை நகரம் தத்தளித்தது. கடந்த காலங்களில் மழை நீர் தேங்காமல் இருப்பதற்கு ஒதுக்கிய நிதி எங்கே? இதற்கு பதில் இல்லை. வடிகால் வசதி தொடர்பாக விசாரணை கமிஷன் அமைப்பேன் என முதல்வர் கூறியது சரிதான். உப்பை திண்றவன் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வின்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். …

The post சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக இலவச ஆம்புலன்ஸ் வாகனம்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: