ஹர்திக் பாண்டியாவுக்கு பதில்; பிரசித் கிருஷ்ணா தேர்வு ஏன்?: ராகுல் டிராவிட் பேட்டி

கொல்கத்தா:உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் கொல்கத்தாவில் இன்று நடைபெறும் போட்டியில் டாப் 2 இடங்களில் உள்ள இந்தியா-தென்ஆப்ரிக்கா அணிகள் மோதி வருகின்றன.இந்த போட்டி குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அளித்தபேட்டி: ஹர்திக் பாண்டியா விலகியதால் தற்போது எங்களிடம் தரமான 6வது பவுலர் இல்லை. ஆனால் எங்களிடம் இன்ஸ்விங்கர் பந்துகளை வீசி அச்சுறுத்தலை கொடுக்கக் கூடிய விராட் கோஹ்லி இருக்கிறார்.

அவரை ஓரிரு ஓவர்களுக்கு நாங்கள் பயன்படுத்தலாம். கடந்த போட்டியில் கூட ரசிகர்கள் தொடர்ந்து கூச்சலிட்டு கேட்டுக் கொண்டதால் அவர் பந்து வீசுவதற்கு நெருக்கமாக இருந்தார். எனவே அணி மற்றும் வீரர்களின் பதில் சிறப்பாக உள்ளது. கோஹ்லி தனது சதத்தை பற்றி கவலைப்படவில்லை இந்தியாவுக்கு தொடர்ந்து வழக்கம் போல விளையாடுவதற்கு ரிலாக்ஸாக இருக்கிறார். குறிப்பாக தன்னுடைய பிறந்த நாளில் 49 சதத்தை அடிப்பதற்காக கோஹ்லி எவ்விதமான கவலையுடன் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.ஹர்திக் காயம் அடைந்த பிறகு நாங்கள் மூன்று வேகப்பந்துவீச்சாளர்களை வைத்து விளையாடினோம். எங்களிடம் சுழற் பந்துவீச்சாளருக்கும் ஆல்ரவுண்டருக்கும் மாற்று வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால் எங்களுக்கு ஒரு வேகப்பந்துவீச்சாளருக்கு மாற்று வீரர் தேவைப்படுகிறது. எனவே இதன் காரணமாக பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.

எங்களுடைய வேகப்பந்துவீச்சாளர்கள் அற்புதமாக செயல்பட்டு விக்கெட் எடுக்கிறார்கள். இதனால் ஜடேஜா, குல்தீப் ஆகியோரின் செயல்பாடுகள் ரசிகர்களால் கண்டுகொள்ளாமல் செல்லப்படுகிறது. ஜடேஜா போன்ற வீரர் பனிப்பொழிவால் பந்து ஈரமாக இருந்தாலும் அதனை பெரிது படுத்தாமல் செயல்படுகிறார்கள். எங்களுக்கு நடு ஓவர்களில் தேவையான விக்கெட்டையும் எதிரணியின் ரன் குவிக்கும் வேகத்தையும் ஜடேஜா குறைக்கிறார். பேட்டிங் வரிசையில் ஆறாவது மற்றும் ஏழாவது இடத்தில் விளையாடும் வீரர்களுக்கு எப்போதாவது தான் அந்த வாய்ப்பு கிடைக்கும். அப்படி வாய்ப்பு வரும்போது எல்லாம் ஜடேஜா எங்கள் அணிக்காக பல முக்கிய ஆட்டத்தை விளையாடி இருக்கிறார். அவருடைய பில்டிங் எப்போதும் போல் பிரமாதமாக இருக்கிறது. ஒரு வீரராக ஜடேஜா அனைத்தையும் எங்களுக்கு தருகிறார், என்றார்.

The post ஹர்திக் பாண்டியாவுக்கு பதில்; பிரசித் கிருஷ்ணா தேர்வு ஏன்?: ராகுல் டிராவிட் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: