சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு விரிவான கலந்தாய்வுகளை நடத்திய பிறகு தான் சரியான முடிவை எடுக்க முடியும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார். தேர்தலை கணக்கில் கொள்ளாமல் உண்மையாகவே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்துவது குறித்து ஆராயும் எண்ணம் ஒன்றிய அரசுக்கு இருந்தால், அதற்கான கலந்தாய்வுகளை இப்போதே தொடங்க வேண்டும். அதற்காக ஓர் ஆணையத்தை அமைத்து, 6 மாதத்துக்குள் அதன் அறிக்கையை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.
The post சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு கலந்தாய்வை இப்போதே தொடங்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு ராமதாஸ் வேண்டுகோள் appeared first on Dinakaran.