சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மழை தொடரும். ராமநாதபுரம், நெல்லை மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. சென்னை, திருவள்ளூரில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
The post தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என கணிப்பு..!! appeared first on Dinakaran.
