‘நீ தேங்கா பீஸு, நீ பூட்டு கேஸு’ மபி முதல்வர் சிவ்ராஜ் சிங், கமல்நாத் மாறி மாறி தாக்கு

போபால்: மத்தியபிரதேச தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல்நாத் பொதுக்கூட்டம் ஒன்றில், ‘‘முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் சரியான அறிவிப்பு மெஷின். திட்டங்களை அறிவிப்பது மட்டும் தான் அவர் வேலை. தினமும் காலையில் வீட்டை விட்டு புறப்படும் போது கையில் தேங்காயுடன்தான் செல்வார். தேங்காய் உடைத்து திட்டத்தை தொடங்கி வைத்த பிறகு அதை கண்டுகொள்ள மாட்டார்’’ என விமர்சித்தார்.

பதிலுக்கு முதல்வர் சவுகான் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘நான் மாநில வளர்ச்சிக்காவும், மக்கள் நலனுக்காகவும் பாடுபடுவதால் தேங்காயுடன் செல்கிறேன். கமல்நாத் என்ன எடுத்துச் செல்வார் தெரியுமா? பூட்டு. ஏனென்றால் பாஜ கொண்டு வந்த பல நலத்திட்டங்களுக்கு பூட்டு போட்டவர் அவர்’’ என்றார். இதற்கு காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைவர் கே.கே.மிஸ்ரா அளித்த பேட்டியில், ‘‘ஆம், கமல்நாத் பூட்டு போடுபவர்தான். இந்த தேர்தலில் பாஜ அலுவலகத்திற்கு அவர் பூட்டு போடுவார்’’ என கூறி உள்ளார். இவ்வாறு, காங்கிரசும், பாஜவும் மாறி மாறி பிரசார சண்டையில் ஈடுபட்டுள்ளன.

*கோதாவில் அகிலேஷ்
மக்களவை தேர்தலுக்கு மட்டும்தான் இந்தியா கூட்டணி என்றாகி விட்டதால், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவும் தன் பங்கிற்கு காங்கிரசை காலை வாரி வருகிறார். கமல்நாத் பிரசாரத்தில் அகிலேஷ் பெயரை வகிலேஷ் என குறிப்பிட்டதற்கு பதிலளித்த அகிலேஷ் யாதவ், ‘‘தன்னோட பெயரிலேயே பாஜவின் சின்னத்தை வைத்திருப்பவரால் மட்டும்தான் அகிலேஷை, வகிலேஷ் என சொல்ல முடியும்’’ என்றார். கமல் என்றால் இந்தியில் தாமரை என அர்த்தமாகும்.

The post ‘நீ தேங்கா பீஸு, நீ பூட்டு கேஸு’ மபி முதல்வர் சிவ்ராஜ் சிங், கமல்நாத் மாறி மாறி தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: