அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், அக்.13: நாமக்கல்லில், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில துணைத்தலைவர் ஜெயக்கொடி தலைமை வகித்தார். அங்கன்வாடி மையங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்; கூடுதல் பொறுப்பு என்ற பெயரில் பணிச்சுமையை அதிகப்படுத்தக் கூடாது; செயல்படாத செல்போன்களை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பாண்டிமா, செயலாளர் பிரேமா, பொருளாளர் கலா, சிஐடியூ மாவட்ட செயலாளர் வேலுசாமி ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். மாவட்டம் முழுவதிலுமிருந்து 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

The post அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: