உலக கோப்பை கிரிக்கெட்டை வரவேற்க பேட், பால் பட்டாசு சிவகாசியில் தயார்

சிவகாசி: ‘குட்டி ஜப்பான்’ என அழைக்கப்படும் விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உற்பத்தியாகும் பட்டாசுகள் இந்தியாவின் 90 சதவீத பட்டாசு தேவையை பூர்த்தி செய்கிறது. தற்போது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுவதால் கிரிக்கெட் ரசிகர்களை கவரும் வகையில் பேட் – பால் பட்டாசுகள் களமிறங்கியுள்ளன. திரியில் தீயை பற்ற வைத்தவுடன், கிரிக்கெட் மட்டையிலிருந்து கம்பி மத்தாப்பு போல எரிந்து, பந்திலிருந்து வண்ணக் கலர்களில் புகை வெளிவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘கிக்கபிள்ஸ்’ என்ற பட்டாசின் மேல் சாக்லேட் கவர் போல் மூடப்பட்டுள்ளது.

அதன் திரியில் தீயை பற்ற வைத்தவுடன் சக்கரம் போல் சுழன்று, அதிலிருந்து 2 பம்பரங்கள் தனியாக வெளியேறி கலர் வெளிச்சத்துடன் சுழல்கிறது. சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு தனித்தனியே வடிவமைக்கப்பட்டுள்ள ‘கிண்டர்ஜாய் சாக்லேட்’ வடிவ பட்டாசும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் தீயை பற்ற வைத்தவுடன், சக்கரம் போல சுற்றி, அதிலிருந்து 2 வண்ணத்து பூச்சிகள் பிரிந்து மேலே எழும்பி சென்று சடசடவென வெடித்து சிதறும்.

மேலும் தேனீக்கள் போல பறக்கும் ‘ஹனி பீஸ்’, 15க்கும் மேற்பட்ட பார்பி பொம்மை வடிவ பட்டாசு, ஹேப்பி ஜிராபி, மீமோ, கடல்குதிரை, மோட்டு பட்லு, ஹார்க், கிட்ஸ்ஜோன், கோல்டன் லைன், ட்ரோன், ஸ்கை கிங்- படாபீகாக், பப்ஜி உள்ளிட்ட சிறுவர்களுக்கு பிடித்த சாக்லேட் மற்றும் கார்ட்டூன்களில் வடிவமைத்த பட்டாசுகள் அனைத்து தரப்பினர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

 

The post உலக கோப்பை கிரிக்கெட்டை வரவேற்க பேட், பால் பட்டாசு சிவகாசியில் தயார் appeared first on Dinakaran.

Related Stories: