பாஜவில் ஓபிஎஸ் இணைகிறாரா? வானதி சீனிவாசன் பதில்

கோவை: பாஜவில் ஓபிஎஸ் இணைகிறாரா என்பதற்கு வானதி சீனிவாசன் பதில் அளித்தார். கோவை டவுன்ஹாலில் உள்ள சர்வோதயா சங்கம் காதி பவனில் காந்தி ஜெயந்தி விழா நேற்று நடைபெற்றது. இதில் பாஜ தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ கலந்து கொண்டார். அப்போது அவர் அளித்த பேட்டி: எனது டெல்லி பயணத்தை குறித்து கேட்கிறீர்கள். நேற்று முன்தினம் மத்திய தேர்தல் குழு கூட்டம் நடந்தது. கட்சி தேசிய தலைமை, முக்கியமான தலைவர்களை சந்தித்து கூட்டத்தில் கலந்து கொண்டது சிறப்பாக இருந்தது.

அந்த தேர்தல் குழு கூட்டத்தில் சத்தீஸ்கர் மாநிலம், ராஜஸ்தான் தேர்தலுக்கான வேட்பாளர்கள் தேர்வு, 2 மாநிலத்தில் தேர்தலின்போது பாஜ செய்ய வேண்டிய நிகழ்ச்சிகள், திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. ப.சிதம்பரம் 33 சதவீத சட்ட மசோதா அமலுக்கு வராது என்கிறார். காங்கிரஸ் ஆட்சி இருந்த மனநிலையிலே இருந்து பேசி வருகிறார். சட்ட மசோதா கொண்டு வந்து இருப்பவர் தற்போதைய பாரத பிரதமர் மோடி. எதை சொல்கிறாரோ அதை செய்யக்கூடியவர். பெண்களுக்கான உரிமை கண்டிப்பாக அமல்படுத்தப்படும். ஓபிஎஸ் பாஜவில் இணைவது பற்றி எனக்கு தெரியவில்லை. இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார்.

The post பாஜவில் ஓபிஎஸ் இணைகிறாரா? வானதி சீனிவாசன் பதில் appeared first on Dinakaran.

Related Stories: