திருமங்கலம் – காரியாபட்டி சாலையில் எச்சரிக்கை போர்டுகளை சேதமாக்கும் மர்ம நபர்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை


திருமங்கலம்: திருமங்கலத்திலிருந்து மேலக்கோட்டை, கீழக்கோட்டை, மைக்குடி, உலகாணி வழியாக காரியாபட்டிக்கு செல்லும் சாலை செல்கிறது. கிராம பகுதிகளின் வழியாக செல்லும் இந்த சாலைகளின் இருபுறமும் அதிகளவில் வீடுகள் அமைந்துள்ளதால் பல இடங்களில் விபத்தினை தவிர்க்கும் வகையில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக பல்வேறு கிராமங்களில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலையின் இருபுறமும், மெதுவாக செல்லவும் என எச்சரிக்கை போர்டுகள் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. நெடுஞ்சாலைத்துறை சார்பில் போர்டு வைக்கப்பட்ட சிறிது நாள்களில் இந்த போர்டில் எழுதப்பட்டுள்ள விழிப்புணர்வு வாசகங்களை மர்ம நபர்கள் சிலர் உள்நோக்கத்துடன் ஒரு சில எழுத்துகளை கிழித்து எடுத்துள்ளனர்.

சில எச்சரிக்கை போர்டில் அர்த்தங்கள் மாறும் வகையில் விழிப்புணர்வு வாசகங்கள் சிதைக்கப்பட்டுள்ளன. எச்சரிக்கை போர்டுகளைச் சேதப்படுத்தி, வாகன ஓட்டிகளின் கவனத்தினை திசைதிருப்பும் இந்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், சிதைவடைந்துள்ள எழுத்துகளை மீண்டும் புதிதாக எழுத நெடுஞ்சாலைத்துறையினர் முன்வரவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருமங்கலம் – காரியாபட்டி சாலையில் எச்சரிக்கை போர்டுகளை சேதமாக்கும் மர்ம நபர்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: