தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் லைட்டரை தடைசெய்ய கோரி மனு

ஏழாயிரம்பண்ணை, செப். 30: சாத்தூரில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி தமிழக ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

ஆளுநர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் தீப்பெட்டிக்கு விதிக்கப்பட்ட வரியை குறைக்க வேண்டும் மற்றும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் லைட்டரை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர். இந்நிகழ்வில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள்,பொது மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் லைட்டரை தடைசெய்ய கோரி மனு appeared first on Dinakaran.

Related Stories: