ரூ.71.60 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய மீன் இறங்கு தளங்கள் மீன் விதை பண்ணை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: மீன்வளத்துறை சார்பில் ரூ.71.60 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய, மேம்படுத்தப்பட்ட மீன் இறங்கு தளங்கள் மற்றும் மீன் விதை பண்ணையை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை, தலைமைச்செயலகத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ.56.95 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 3 புதிய மீன் இறங்கு தளங்கள், 2 மேம்படுத்தப்பட்ட மீன் இறங்கு தளங்கள், தமிழ்நாடு ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் நாகப்பட்டினம் மீன்வள பொறியியல் கல்லூரியில் ரூ.14.60 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மாணவர் மற்றும் மாணவியர் விடுதி கட்டடங்களையும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், தலைமைச்செயலாளர் சிவ் தாஸ் மீனா, கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளம், மீனவர் நலத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் பழனிசாமி, தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் (பொறுப்பு) பெலிக்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post ரூ.71.60 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய மீன் இறங்கு தளங்கள் மீன் விதை பண்ணை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: