உத்திரமேரூரில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்ட அளவிலான எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வட்டாட்சியர் ஞானவேல் தலைமை தாங்கினார். மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் ஜெயராமன், உத்திரமேரூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் செல்வகுமார், நீதிமொழி முகவர் தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன் வரவேற்றார். கூட்டத்தில் எரிவாயு உருளைக்கு அரசு நிர்ணயிக்கப்பட்ட விலை பட்டியலினை எரிவாயு விநியோகிக்கும் வாகனங்களில் கட்டாயம் அச்சிட வேண்டும். உத்திரமேரூர் வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் கழிவறை வசதி, காற்று நிரப்பும் கருவி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அமைக்க வேண்டும். பெட்ரோல் பங்கு இயங்கும் பகுதிகளில் வேகத்தடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியில் நுகர்வோர் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் எரிவாயு நுகர்வோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post உத்திரமேரூரில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: