இந்நிலையில், அப்பணிக்கான தொகையை ஒப்பந்ததாரருக்கு வழங்கிட, கமிஷன் கேட்டு அதிமுக கட்சியை சேர்ந்த ஊராட்சி மன்ற துணைத்தலைவர் நித்தியானந்தம் பணிக்கான தொகை காசோலையில் கையொப்பமிட மறுத்து கடந்த மூன்று மாத காலமாக அலைகழித்து வந்துள்ளார். மேலும், ஊராட்சியில் எந்த பணி நடைப்பெற்றாலும். தனக்கு கமிஷன் வழங்க வேண்டும் இல்லையெனில், இதுபோன்று நிறைவுற்ற பணிகளுக்கான காசோலையில் கையொப்பமிட மறுத்துள்ளார்.
இது குறித்து அரசு அதிகாரிகளிடம் தெரிவித்தாலும் தன்னை ஒன்றும் செய்யமுடியாது என கூறுவதால், துணைத்தலைவரின் அராஜகம் காரணமாக அப்பகுதியில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதில் சிக்கல் நீடிப்பதால், கிராம பெண்கள் மற்றும் வார்டு உறுப்பினர் உமாமகேஸ்வரி கணேசன் ஊராட்சி அலுவலக நுழைவு வாயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் நித்தியானந்தம் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தினர்.
The post கமிஷன் கேட்கும் ஊராட்சி துணைத்தலைவரை கண்டித்து வார்டு உறுப்பினர், கிராம பெண்கள் போராட்டம் appeared first on Dinakaran.
