இளம் தொழில் முனைவோர் துபாய் பயணம் ஆன்லைன் டிரேடிங்கில் உள்நாட்டு வணிகத்தை ஊக்கப்படுத்த திட்டம்: விக்ரமராஜா பேட்டி

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் அங்கமான, இளம் தொழில் முனைவோர் அமைப்பினர், தமிழக மளிகை பொருட்களை துபாய் நாட்டிற்கு ஏற்றுமதி செய்திடவும், அந்நாட்டின் தேவைகளை அறிந்திடவும், அங்குள்ள அரசு மற்றும் வியாபாரிகளுடன் கலந்து ஆலோசனை செய்திட வரும் 23, 24ம் தேதி துபாய் நாட்டில் மாநாடு நடைபெறுகிறது.

இதற்காக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா தலைமையில் 162 பேர், சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை விமானத்தில் துபாய் புறப்பட்டு சென்றனர்.சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் விக்ரமராஜா கூறியதாவது: தமிழகத்தில் தயாராகும் பல்வேறு தரமான எண்ணெய், அரிசி, மளிகை பொருட்கள், தேங்காய் போன்ற உற்பத்தி பொருட்களை, இப்போது துபாய் நாட்டிலும் சந்தைப்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.

தமிழ்நாடு வணிகர் பேரவை வருகின்ற நவம்பர் 10ம் தேதி, நவீன வசதிகளுடன் புதிய அலுவலக கட்டிடத்தை திறக்க இருக்கிறோம். அதன் பின்பு எங்களுக்கென்று தனியாக ஒரு செயலி உருவாக்கப்பட்டு, அதில் சிறு வியாபாரிகள், சாலையோர வியாபாரிகள், பெட்டிக்கடை வைத்துள்ளவர்களை உட்பட அனைத்து வணிகர்களையும் இணைக்க இருக்கிறோம்.

The post இளம் தொழில் முனைவோர் துபாய் பயணம் ஆன்லைன் டிரேடிங்கில் உள்நாட்டு வணிகத்தை ஊக்கப்படுத்த திட்டம்: விக்ரமராஜா பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: