பெட்ரோல் நிலையம் அமைக்க தாட்கோ மூலம் கடன் வசதி: 27க்குள் விண்ணப்பிக்கலாம்

விருதுநகர், செப்.21: பெட்ரோல் நிலையம் அமைக்க தேர்வானவர்களுக்கு தாட்கோ மூலம் கடன் வழங்கப்பட உள்ளது. இதற்கு 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் மூலம் பெட்ரோல் நிலையம் அமைக்க தேர்ந்தெடுக்கப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சேர்ந்த நபர்களுக்கு தாட்கோ மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும்.

திட்டத்தில் பயன்பெற www.petrolpumpdealerchayan.in என்ற இணைய தளத்தில் 18 முதல் 60 வயது வரை உள்ள ஆண், பெண் அனைவரும் செப்.27க்குள் விண்ணப்பிக்க வேண்டும். பெட்ரோலியம் நிறுவனத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு முதல்முறையாக கொள்முதல் செய்யும் பெட்ரோல், டீசல் தொகையினை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்களுக்கு குறைந்த வட்டியில் தாட்கோ மூலமாக கடனாக வழங்கப்படும்.

பாரத் பெட்ரோலியம் மூலம் தேர்வாகும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் தாட்கோ தலைமை அலுவலக மாநில திட்ட மேலாளர் கைபேசி எண் 7358489990 தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post பெட்ரோல் நிலையம் அமைக்க தாட்கோ மூலம் கடன் வசதி: 27க்குள் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: