இதனால் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காகங்கே இளைஞர்கள் திரண்டிருந்தனர். அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக டிடிஎப் வாசன் வீலிங் சாகசத்தில் ஈடுபட்டிருக்கிறார். தாமல் பகுதியில் சர்வீஸ் சாலையில் வீலிங் செய்யும்போது, பைக் நிலைதடுமாறி இரண்டு மூன்று முறை தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிடிஎப் வாசனுக்கு படுகாயம் ஏற்பட்டு காரப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, முதலுதவி சிகிச்சை பெற்றார். அவரது கைக்கு மாவுகட்டு போடப்பட்டு கால், உடல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சென்னையில் சிகிச்சை பெற்று கொள்வதாக கூறி, அவரது நண்பர்கள் அவரை அழைத்து சென்றனர்.
இதுகுறித்து பாலுச்செட்டிசத்திரம் காவல் துறையினர், மனித உயிருக்கு ஆபத்து உண்டாகும் வகையில் வாகனத்தை அஜாக்கிரதையாக ஓட்டுவது, பிறருடைய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் முறையில் அசட்டுத் துணிச்சலுடன் வாகனத்தை இயக்குவது உள்ளிட்ட 2 பிரிவுகள் மற்றும் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் 2 பிரிவுகள் என மொத்தம் 4 பிரிவுகளின் கீழ் வாசன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின்னர் சென்னையில் உள்ள நண்பர் வீட்டில் பதுங்கி இருந்த யூடியூபர் டிடிஎப் வாசனை, நேற்று அதிகாலை போலீசார் கைது செய்து, காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து டிடிஎப் வாசன் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
The post சாலை விதிகளை மீறி வீலிங் சாகசத்தில் ஈடுபட்ட பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் கைது: போலீசார் அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.
