கர்நாடகம் தண்ணீர் திறக்க முன்வந்தாலும் பாஜ தடுக்கிறது: பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

விருத்தாசலம்: ‘கர்நாடகம் தண்ணீர் திறக்க முன் வந்தாலும் பாஜ தடுக்கிறது’ என்று பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டி உள்ளார். விருத்தாசலத்தில் பெரியார் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: அணையில் தண்ணீர் குறைவாக இருக்கிறது என்ற ஒரு காரணத்தைக் காட்டி தொடர்ந்து கர்நாடகா அரசு தமிழ்நாட்டுக்கு தர மறுத்து வருவது நியாயம் இல்லை. அணைகள் நிரம்பி உபரி வந்தால் தான் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுப்போம் என்கிற நிலையை கடைபிடிப்பது எந்த விதத்திலும் சரியல்ல. ஒருவேளை காங்கிரஸ் அரசு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற ஒரு மனநிலைக்கு வந்தால் அங்கு உள்ள பாஜக திறக்கவே கூடாது. தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கொடுக்கவே கூடாது என்று போராடுகிறது.

அவர்களுக்கு அடிபணிந்து கர்நாடக அரசாங்கம் தமிழகத்தை வஞ்சிப்பது நியாயம் இல்லை. அவசரமாக காவிரி மேம்பாட்டு ஆணையத்தின் கூட்டத்தை கூட்டி உள்ளார்கள். 21ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. எனவே நீதிமன்றம் சொல்லிதான் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று இல்லாமல் தமிழ்நாட்டில் காய்ந்து கொண்டிருக்கிற நெல் சாகுபடியை காப்பாற்ற கர்நாடகா, தண்ணீரை திறந்து விட வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

The post கர்நாடகம் தண்ணீர் திறக்க முன்வந்தாலும் பாஜ தடுக்கிறது: பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: