தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கோடை காலம் முடிவடைந்து 3 மாதங்களை கடந்த நிலையிலும் இன்னும் வெயில் தாக்கம் குறையவில்லை. அவ்வப்போது பரவலாக மழை பெய்து வந்தாலும், மழை இல்லாத நாட்களில் கோடை காலத்தில் எந்த அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் இருந்ததோ அந்த அளவுக்கு வெயில் கொடுமை இன்னும் வாட்டி வதைத்து தான் வருகிறது. பகலில் கடும் வெயிலும் இரவில் கனமழையுமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் 6 நாட்களுக்கு பரவலாக இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும், இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், சேலம், குமரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், ஈரோடு, தென்காசி, கடலூர் மற்றூம் புதுச்சேரியிலும் மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.

The post தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: