அரசு பெண் ஊழியரிடம் 7 பவுன் நகை பறிப்பு

மானூர், செப். 6: மானூர் அருகே பைக்கில் சென்ற அரசு பெண் ஊழியரிடம் 7 பவுன் நகையை பறித்துச் சென்றோரை போலீசார் தேடி வருகின்றனர். பாளை.ராஜிவ் நகரை சேர்ந்த இசக்கி மனைவி மகாலட்சுமி (53). மானூர் ஒன்றிய அலுவலகத்தில் திட்ட பணிகள் மேற்பார்வையாளராக பணியாற்றி வரும் இவர், நேற்று காலை அரசு பணி நிமித்தம் ரஸ்தா நாஞ்சான்குளம் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து மற்றொரு பைக்கில் வந்த மர்மநபர், மகாலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகை, கைகளில் அணிந்திருந்த 2 பவுன் பிரேஸ்லட் என மொத்தம் 7 பவுன் தங்க நகைகளை பறித்துச் சென்றனர். இதுகுறித்து மகாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் மானூர் இன்ஸ்பெக்டர் சபாபதி வழக்குப்பதிந்து நகை பறித்துச்சென்றவரை தேடிவருகிறார்.

The post அரசு பெண் ஊழியரிடம் 7 பவுன் நகை பறிப்பு appeared first on Dinakaran.

Related Stories: