புதுக்கோட்டையில் வீடியோ பதிவுடன் விடியவிடிய பறக்கும்படை வாகன சோதனை

 

புதுக்கோட்டை, மார்ச் 29: புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் புதுக்கோட்டை நகருக்குள் நுழையும் வாகனங்கள் மற்றும் புதுக்கோட்டை நகரில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களை நிறுத்தி வீடியோ பதிவுடன்விடிய விடிய சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். தமிழ்நாடு சட்மன்ற தேர்தல் தேதி அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 15 ம் தேதி மாலை அறிவித்தது. அந்த அறிவிப்பின்படி தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்ததை தொடர்ந்து தேர்தல்நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பறக்கும் படையினரும், நிலையான கண்காணிப்பு குழுவினரும், வீடியோ கண்காணிப்பு குழுவினரும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரு குழுவிற்கு மூன்று பேர் வீதம் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் இருப்பார்கள் என மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான அருணா தெரிவித்து இருந்தார். இந்நிலையில் நேற்று புதுக்கோட்டை இலுப்பூர் செல்லும் பிரிவு சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் புதுக்கோட்டையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களையும் அதே போல் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பகுதிகளில் இருந்து புதுக்கோட்டை நகருக்குள் நுழையும் வாகனங்களையும் நிறுத்தி அதிரடி சோதனைமேற்கொண்டனர்.

குறிப்பாக இந்த வாகன சோதனைமுழுவதும் வீடியோ பதிவு செய்வதற்கு ஒவ்வொரு பறக்கும் படை குழுவினருக்கும் ஒரு வீடியோகிராபர் நியமிக்கப்பட்டுள நிலையில் பறக்கும் படை அதிகாரிகள் வாகனங்களை சோதனை செய்வது முழுவதுமாக வீடியோ பதிவு செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: