பெரம்லூர் மாவட்டத்தில் தேர்தல் பணி அலுவலர்கள் வெளிப்படை தன்மையுடன் பணியாற்ற வேண்டும்

 

பெரம்பலூர்,மார்ச் 29: தேர்தல் பணிகளில் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் வெளிப்படைத் தன்மையுடன் பணியாற்ற வேண்டும் என பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் மிருணாளினி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:தேர்தல் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள ஒருங்கிணைப்பு அலுவலர்களாக பணி அமர்த்தப்பட்டுள்ள நீங்கள் வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்ற வேண்டும். கூட்டுறவுத் துறையின் துணைப்பதிவாளர் வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலர், வாக்குப்பதிவு இயந்திரங்களின் பட்டியல், பாதுகாப்பு மற்றும் தயார் படுத்துதல், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் வாக்குச் சாவடிகளுக்கு randamaization செய்து வழங்குதல், பழுதான இயந்திரங்கள் குறி த்து ஆவணப்படுத்தி அறிக்கை தயார் செய்து தேர்தல் ஆணையத்திற்கு அனுப்புதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

வாக்களிப்பதின் முக்கியத்துவைத்தை அனைவருக்கும் எடுத்துரைக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் விழிப்புணர்வு பணிகளுக்கான ஒருங்கிணைப்பு அலுவலர், தேர்தல்நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் துணை வட்டாட்சியர்களுடன் ஒருங்கிணைந்து மாவட்டத்திற்கான தேர்தல் விழிப்புணர்வு செயல் திட்டப்படி (SVEEP ACTION PLAN) அனைத்து வாக்குச் சாவடிகளின் வாக்காளர்களுக்கும் எட்டும் விதமாக விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

மாவட்டக் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கு பயிற்சி வழங்குவதற்காக நியமிக்கப் பட்டுள்ள ஒருங்கிணைப்பு அலுவலர், தேர்தல் தொடர்பாக வாக்குச்சாவடி அலுவலர்கள், மண்டல அலுவலர்கள், காவல் துறையினர், வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் முகவர்கள் ஆகியோர்களுக்கு பயிற்சி வழங்கிட கால அட்டவணை தயார் செய்து பயிற்சி வகுப்புகளை நடத்திட வேண்டும். மேலும், பயிற்சி நடத்துவதற்கு உகந்த மையங்களை தேர்வுசெய்தல், பயிற்சி கையேடுகளின் தயார் நிலை உறுதிசெய்ய வேண்டும்.

மாவட்டக் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), வாக்குப்பதிவு அலுவலர்கள் மண்டல அலுவலர்கள், தேர்தல் நுண் பார்வையாளர்கள், பணிக்கு தகுதியானவர்களை கண்டறிதல், தரவுமையம் உருவாக்குதல், அனைவருக்கும் உரிய கால அட்டவணையில் பயிற்சி அளிக்கப்பட்டதை உறுதி செய்தல், வாக்குப்பதிவு நாளன்று வாக்குப்பதிவு அலுவலர்கள் மண்டல அலுவலர்கள், தேர்தல் நுண்பார்வையாளர்கள் உள்ளிட்ட தேர்தல் பணியாளர்களில் ஏற்படும் பற்றாக்குறைகளை மேலாண்மை செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் இறுதி வாக்காளர் பட்டியலுக்கு பின்பு சேர்க்கப் படும் வாக்காளர்கள் குறித்து சம்பந்தபட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்றுதல், சேர்க்கப்பட்ட அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் அடையாள அட்டை சென்று சேர்வதை கண்காணித்தல், இறுதி வாக்காளர் பட்டியல்கள் வேட்பாளர்களுக்கு சென்று சேர்வதை உறுதி செய்தல், வாக்குச் சாவடிகளுக்கு செல்லும் வாக்காளர், பட்டியல்கள் தயார் செய்ய வேண்டும்.

மாவட்டக் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நில மெடுப்பு) தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து இறுதி செய்யப்பட்ட வேட்பாளர்கள் பட்டியல்படி வாக்குச்சீட்டு மற்றும் அஞ்சல் வாக்குச் சீட்டின் எண்ணிக்கையினை நிர்ணயம் செய்து அச்சிடப் படுவதை மேலாண்மை செய்ய வேண்டும். ஊராட்சிகள் உதவி இயக்குநர், தேர்தல் நடத்தை விதிமுறைகளை நடைமுறைப் படுத்துதல்,அரசு அலுவலர்கள், அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், ஊடகங்கள் விதிமுறைகளை பின்பற்றுதலை உறுதி செய்தல், நடத்தை விதிமுறைகளுக்கு எதிரான விளம்பரங்களை கண்டறிதல், அகற்றுதல், பணியினை மேலாண்மை செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(சத்துணவு), ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் பணிகளை ஒருங்கிணைத்து, தொலைக்காட்சி, தினசரி நாளிதழ், சமூக வளைதளம், எப்.எம். ரேடியோக்களில் வரும் அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை கண் காணித்து தினசரி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அனைத்து அலுவர்களும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ள பணிகளில் எந்தவித சுணக்கமும் இல்லாமல் பணியாற்றிட வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

Related Stories: