திருச்சி, மார்ச். 29: சட்டமன்ற பொதுத்தேர்தல், 2026 முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளின் அனைத்து வாக்குசாவடிகளிலும் பணியாற்ற உள்ள வாக்குப்பதிவு தலைமை அலுவலா்கள், வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு முதலாவது சமவாய்ப்புக்குட்படுத்தும் நடைமுறையானது கடந்த 23ம் தேதி முடிவடைந்தது. அவர்களுக்கு முதலாவது கட்ட பயிற்சி நடைபெற்று வருகிறது. அதன் விவரம்: 138-மணப்பாறை, லட்சுமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி – 2 ஆயிரத்து 254 பேருக்கும், 139 – ஸ்ரீரங்கம், ஸ்ரீ மத் ஆண்டவர் கலை அறிவியல் கல்லூரி – ஆயிரத்து 464 பேருக்கும், 140-திருச்சி (மேற்கு), புத்தூர் பிஷப் ஹீபர் கல்லூரி – ஆயிரத்து 314, 141-திருச்சி (கிழக்கு),
ஹோலி கிராஸ் மகளிர் கல்லூரியில் ஆயிரத்து 646 பேருக்கும், 142-திருவெறும்பூர் – மான்ட்போர்ட் பள்ளி, காட்டூரில் ஆயிரத்து 211 பேருக்கும், 143-லால்குடி, நெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆயிரத்து 301 பேருக்கும், 144-மணச்சநல்லூர், அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 831 பேருக்கும், 145-முசிறி, கொங்குநாடு பொறியியல் கல்லூரி, ஏலூர்பட்டியில் – 2 ஆயிரத்து 63, 146-துறையூர், சவுடாம்பிகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, துறையூர் ஆயிரத்து 292 பேருக்கும் பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சிகளை சட்டமன்ற தொகுதி வாரியாக கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர். மேலும் வாக்குப்பதிவு தலைமை அலுவலா்கள்,
வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு, சட்டமன்ற தொகுதி வாரியாக பள்ளிக்கல்வி துறை சார்பாக பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. பயிற்சிபேருவோருக்கு கையேடுகள் வழங்கப்பட்டு, மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களை கையாளும் முறை குறித்தும், வாக்குசாவடியில் வாக்குப்பதிவு நாளன்று பயன்படுத்தப்படும் படிவங்கள் குறித்து, வழிகாட்டு நெறிமுறைகள் தொடா்பாக பயிற்சிகள் வழங்கப்பட்டது. 138 – மணப்பாறை மற்றும் 140 – திருச்சி (மேற்கு) ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று வரும் பயிற்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் சரவணன் ஆய்வு செய்து பியிற்றுனர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இதேபோல 138 – மணப்பாறை மற்றும் 141 – திருச்சி (கிழக்கு) ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று வரும் பயிற்சியினை கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜி, 140 – திருச்சி (மேற்கு) சட்டமன்ற தொகுதியில் நடைபெற்று வரும் பயிற்சியினை கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர்(ஆவின்) முத்துமாரி, 141 – திருச்சி(கிழக்கு) சட்டமன்ற தொகுதியில் நடைபெற்றும் வரும் பயிற்சியினை கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் முதுநிலை மண்டல மேலாளா், டாஸ்மாக், செந்தில்குமாரி, 142 – திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்றும் வரும் பயிற்சியினை மாவட்ட வருவாய்் அலுவலர் (பதிவுகள் சாிபார்ப்பு) .
ரமேஷ், 143 – லால்குடி மற்றும் 144 – மணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்றும் வரும் பயிற்சியினை கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நிலமெடுப்பு) நெடுஞ்சாலைகள் ரம்யாதேவி மற்றும் 145 – முசிறி மற்றும் 146 – துறையூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் நடைபெற்றும் வரும் பயிற்சியினை மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை தீர்ப்பாய அலுவலர் ராஜேந்திரன் ஆகியோரும் ஆய்வு செய்தனர்.
