அடிக்கடி தேர்தல் வளர்ச்சியை பாதிக்கும்: ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கருத்து

கோவை: ‘அடிக்கடி தேர்தல் என்பது வளர்ச்சியை பாதிக்கும்’ என்று ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார். கோவை விமான நிலையத்தில் ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று அளித்த பேட்டி: உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்பதை ஒருபோதும் இந்து மதமோ சனாதன தர்மமோ வலியுறுத்தவில்லை. பல்வேறு தொழில்களை செய்து கொண்டிருந்தவர்கள் பல்வேறு ஜாதிகளாக பிரிந்து கொண்டிருக்கிறார்கள். பாரம்பரியமும் அதனுடைய பெருமையும் காக்கப்பட வேண்டும் என்று நினைக்கின்ற தமிழர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது. அடிக்கடி குழந்தை என்பது அன்னையர் நலத்திற்கு கேடு. அதுபோல் அடிக்கடி தேர்தல் என்பது ஒட்டுமொத்த வளர்ச்சியை பாதிக்கும்.

ஒரே நேரத்தில் எல்லா அமைப்புகளுக்கும் தேர்தல் என்பது தேசத்தின் முன்னேற்றத்தை விரைவுபடுத்தும். ஏழை மக்களின் பொருளாதார நிலையை மனதில் கொண்டு ரூ.200 காஸ் விலை குறைக்கப்பட்டுள்ளது. நாம் விஞ்ஞான ரீதியாக வளர்ந்து வருகிறோம். அந்த வளர்ச்சி மேலும் மேலும் இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய பிரார்த்தனை பாஜவிற்கு எதிராக எல்லா கட்சிகளும் ஒன்றாக சேர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது உங்கள் கருத்து. இந்த கருத்து முற்றிலுமான அரசியல் கருத்து. அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது பிரதமருக்கும், அமித்ஷாவுக்கும், ஜே.பி. நட்டாவுக்கும் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

The post அடிக்கடி தேர்தல் வளர்ச்சியை பாதிக்கும்: ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கருத்து appeared first on Dinakaran.

Related Stories: