ஆனால் ஆதித்யா ஏழு கதிர்வீச்சு சாதனங்களை வைத்துக்கொண்டு, அனைத்து விதமான கதிர்வீச்சுகளும் ஆதித்யா செயற்கைக்கோளால் பார்க்க முடியும். காந்த புலன்கள் எந்த இடங்களில் எவ்வாறு மாறுகிறது, என்பதை பார்க்க முடியும். சூரியனை புரிந்து கொள்வதற்கு அங்கு நடக்கும் நிகழ்வுகளை தெரிந்துகொள்ள, சூரியன் மத்தியில் எப்படி மிக அதிகமான வெப்பம் இருக்கிறதோ. மேலே வர வர வெப்பம் குறைகிறது. அதேபோல் சில இடங்களில் திடீரென வெப்பம் அதிகமாகிறது. அது மிகப்பெரிய அறிவியல் புதிர். சூரியனில் நடைபெறுகின்ற நிகழ்வுகளால் சில வெடிப்புகள் வருகின்ற பொழுது, பூமியில் உள்ள காந்த புலன்கள் நம்மை பாதுகாக்கின்றன.
ஆனால் சூரியனில் வரும் கதிர்கள் சில சமயங்களில் செயற்கைக்கோள்களுக்கும் பாதிப்பை உருவாக்குகிறது. அதில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும். எல் 1 என்ற இடத்தில் 15 லட்சம் கிலோமீட்டரில் வைக்கப்பட உள்ள செயற்கைக்கோள், நமக்கு சூரிய புயல்குறித்து முன்னதாகவே ஒரு எச்சரிக்கையை கொடுக்கும். அதை வைத்து செயற்கைக்கோள்களை நம்மால் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முடியும். நமது செயற்கை கோள்கள் மதிப்பு மட்டுமே ரூ.60 ஆயிரம் கோடி. இதன் மூலம் பல லட்சம் கோடி மதிப்பிலான பணிகள் நடைபெறுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
The post ஆதித்யா எல் 1 விண்கலம் பெரும் சவால்களை கொண்டது சூரிய புயலால் ஏற்படும் ஆபத்து தவிர்க்க ஆதித்யா உதவும்: மயில்சாமி அண்ணாதுரை பேட்டி appeared first on Dinakaran.
