‘பிடே’ உலகக் கோப்பை செஸ் போட்டியில் சாதித்த பிரக்ஞானந்தாவை நேரில் அழைத்து மோடி பாராட்டு

புதுடெல்லி: தமிழ்நாட்டை சேர்ந்த பிரபல செஸ் வீரர் பிரக்ஞானந்தாவை நேரில் அழைத்து பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். ‘பிடே’ உலகக் கோப்பை செஸ் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த பிரக்ஞானந்தா 2வது இடம் பெற்றார். இறுதிப்போட்டியில் ‘நம்பர் ஒன்’ வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்செனுடன் மோதிய பிரக்ஞானந்தா வெற்றிக்காக கடுமையாக போராடினார். இறுதியில் கார்ல்சென் வென்றதால் பிரக்ஞானந்தா இரண்டாம் இடம் பெற்றார். தமிழ்நாடு திரும்பிய அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டி ரூ.30 லட்சம் பரிசு வழங்கினார். இந்தநிலையில் பிரக்ஞானந்தாவை நேரில் அழைத்து பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். பிரக்ஞானந்தா மற்றும் அவரது பெற்றோரை தனது இல்லத்துக்கே அழைத்து பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

இது குறித்து பிரக்ஞானந்தா வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் , ‘பிரதமர் மோடியை சந்தித்தது பெருமையான தருணம். என்னையும் என் பெற்றோரையும் ஊக்கப்படுத்திய உங்கள் அனைத்து வார்த்தைகளுக்கும் நன்றி சார்’ என்று தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,’ இன்று 7, எல்.கே.எம்.க்கு மிகவும் சிறப்பான பார்வையாளர்கள் வந்திருந்தனர். உங்கள் குடும்பத்துடன், உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி பிரக்ஞானந்தா. நீங்கள் ஆர்வத்தையும் விடாமுயற்சியையும் வெளிப்படுத்துகிறீர்கள். உங்கள் உதாரணம் இந்தியாவின் இளைஞர்கள் எந்த களத்தையும் எப்படி கைப்பற்ற முடியும் என்பதை காட்டுகிறது. உங்களை நினைத்து பெருமிதம் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

The post ‘பிடே’ உலகக் கோப்பை செஸ் போட்டியில் சாதித்த பிரக்ஞானந்தாவை நேரில் அழைத்து மோடி பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: