எஸ்.ஏ.பொறியியல் கல்லூரியின் 26வது ஆண்டு கல்லூரி நாள் விழா

திருவள்ளூர்: பூந்தமல்லி – ஆவடி சாலையில் திருவேற்காட்டில் அமைந்துள்ள எஸ்.ஏ.பொறியியல் கல்லூரியின் 26வது ஆண்டு கல்லூரி நாள் துவக்க விழா மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழா நடைபெற்றது. கல்லூரி தலைவர் துரைஸ்வாமி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பரந்தாமன், செயலர் தசரதன், தாளாளர் அமர்நாத், இணைச் செயலாளர் கோபிநாத், சுதர்சனம் பள்ளி இயக்குனர் சரஸ்வதி, எஸ்.ஏ கலை, அறிவியல் கல்லூரி இயக்குனர் அரவிந்த், எஸ்.ஏ.பொறியியல் கல்லூரி இயக்குனர் சபரிநாத், சுதர்சனம் பள்ளி மற்றும் எஸ்.ஏ கலை, அறிவியல் கல்லூரி தாளாளர் வெங்கடேஷ்ராஜா, கல்லூரி முதல்வர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அறிவியல் மற்றும் மனித வளத்துறை பேராசிரியர் செந்தில்குமார் வரவேற்புரை ஆற்றினார். இந்த விழாவில் கவிஞர் அருள் பிரகாஷ், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதலாம் ஆண்டு மாணவர்களை வாழ்த்தி பேசினார். அப்போது அவர் பேசியதாவது, மாணவர்கள் தங்கள் சுற்றம் அறிந்து, படிப்பதற்கேற்ற மனநிலையை வளர்த்துக் கொள்வது மிகவும் முக்கியம். மேலும் விடாமுயற்சி, சுய ஒழுக்கம் மற்றும் ஆராய்ந்து செயலாற்றும் திறன் ஆகியவை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான் மாணவர்களின் எதிர்காலம் சிறந்து விளங்கும். இவ்வாறு அவர் பேசினார். முடிவில் முனைவர் கோடீஸ்வரன் நன்றி கூறினார்.

The post எஸ்.ஏ.பொறியியல் கல்லூரியின் 26வது ஆண்டு கல்லூரி நாள் விழா appeared first on Dinakaran.

Related Stories: