இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். லாரி கவிழ்ந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த ஆசனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். சத்தியமங்கலத்தில் இருந்து கிரேன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு லாரி மீட்கப்பட்டதை தொடர்ந்து போக்குவரத்து சீரானது. விபத்து காரணமாக ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
The post திம்பம் மலைப்பாதையில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து: போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.