ஃபிடே உலக செஸ் சாம்பியன்ஷிப் பைனல் முதல் போட்டியில் கார்ல்சனுடன் டிரா செய்தார் பிரக்ஞானந்தா: 2வது போட்டி இன்று நடக்கிறது

பாகு: ஃபிடே உலக செஸ் சாம்பியன்ஷிப் பைனலில் இந்தியாவின் பிரக்ஞானந்தா – நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன் மோதிய முதலாவது கிளாசிக் ஆட்டம் டிராவில் முடிந்தது. அஜர்பைஜானின் பாகு நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரின் அரையிறுதியில் அமெரிக்க வீரர் ஃபேபியா கருவானாவை (2வது ரேங்க்) வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சென்னை வீரர் பிரக்ஞானந்தா (18 வயது), பரபரப்பான பைனலில் நம்பர் 1 வீரர் கார்ல்சனுடன் (31 வயது) மோதுகிறார்.

இருவரும் முதலில் 2 கிளாசிக் போட்டிகளில் மோதுகின்றனர். ஏற்கனவே ஆன் லைன் செஸ் போட்டிகளில் கார்ல்சனை வீழ்த்தியிருப்பதால், நேற்று நடந்த முதல் கிளாசிக் போட்டியில் பிரக்ஞானந்தா நம்பிக்கையுடன் விளையாடி நெருக்கடி கொடுத்தார். இரு வீரர்களும் மிகுந்த கவனத்துடன் விளையாடியதால் 35 நகர்த்தல்களுக்குப் பிறகு போட்டியை டிரா செய்ய ஒப்புக்கொண்டனர். இதையடுத்து 2வது கிளாசிக் போட்டி இன்று நடைபெற உள்ளது. இப்போட்டியில் கார்ல்சன் வெள்ளை நிறக் காய்களுடன் விளையாட உள்ளார். இந்த போட்டியில் முடிவு கிடைக்காவிட்டால் அடுத்து ரேப்பிட் முறையில் 2 டை பிரேக்கர் ஆட்டங்கள் நடத்தப்படும்.

The post ஃபிடே உலக செஸ் சாம்பியன்ஷிப் பைனல் முதல் போட்டியில் கார்ல்சனுடன் டிரா செய்தார் பிரக்ஞானந்தா: 2வது போட்டி இன்று நடக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: