சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் குறித்த வழக்கு திருவள்ளூர் நீதிமன்றத்தில் இருந்து மாற்ற கோரி சென்னை உயர்நீதிமதின்றதில் மனு

சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் குறித்த வழக்கு திருவள்ளூர் நீதிமன்றத்தில் இருந்து மாற்ற கோரி அவரது தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருக்கின்றார். சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020ம் ஆண்டு பூந்தமல்லி அருகே இருக்கக்கூடிய தனியார் தங்கும் விடுதியில் சடலமாக மீட்கப்பட்டார்.

கணவர் ஹேம்நாத்திடம் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருப்பதாகவும், எனவே அவர் மீது நடவடிகை எடுக்கவேண்டும் என்று காவல் துறையில் சித்ராவின் தந்தை காமராஜ் புகார் அளித்திருந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை திருவள்ளுர் மாவட்டத்தி இருக்கக்கூடிய மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகின்றது.

இந்த வழக்கு விசாரணை திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு மாற்ற வேண்டும் என்றும் இந்த விசாரணை விரைவில் விரைந்து விசாரணை முடிக்க வேண்டும் என்றும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கின்றார். ஹேம்நாத் இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே மனுக்களை தாக்கல் செய்து விசாரணையை தள்ளிவைத்துள்ளதாகவும் விசாரணை என்பது குற்றச்சாட்டு பதிவு நடைமுறை கட்டத்தில் இருக்கின்றது.

மேற்கொண்டு எந்த முன்னேற்றம் இல்லை என்றும் அதில் குற்றச்சாட்டை வைத்துள்ளார். எனவே தனது வயது முதுமையின் கருத்தில் கொண்டு விசாரணை திருவள்ளூரில் இருந்து சென்னைக்கு மாற்ற வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த மனுவானது ஓரிரு நாட்களில் சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வருவதாக வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றது என்று தெரியவந்துள்ளது.

The post சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் குறித்த வழக்கு திருவள்ளூர் நீதிமன்றத்தில் இருந்து மாற்ற கோரி சென்னை உயர்நீதிமதின்றதில் மனு appeared first on Dinakaran.

Related Stories: