நேற்று 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் உடலில் சேறு பூசி கோயிலில் இருந்து மேள தாளத்துடன் நடனமாடி ஊரை நகர் வலம் வந்து கரியமல்லமனை வழிபட்டனர். மாலையில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் வைக்கோலை திணித்த சாக்கு ஆடை அணிந்து ஊர்வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முக்கிய வீதி வழியாக எடுத்து வரப்பட்ட 500க்கும் மேற்பட்ட முளைப்பாரிகள் கண்மாயில் கரைக்கப்பட்டன. பின்னர் கோயில் பூசாரி இலந்தை முள் படுக்கையில் படுத்து 50க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கரியமல்லம்மனை தரிசனம் செய்தனர்.
The post கமுதி அருகே இலந்தை முள் படுக்கையில் படுத்து அருள்வாக்கு கூறிய பூசாரி: ஆடி பொங்கல் திருவிழாவில் பரவசம் appeared first on Dinakaran.
