சென்னை பல்கலை பட்டமளிப்பு விழாவில் பிரின்ஸ் கல்லூரி மாணவர்கள் 10 பேருக்கு தங்கப்பதக்கம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்

சென்னை: சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு, பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு தங்கப் பதக்கம் வழங்கி பாராட்டினார். இதில் கவுரிவாக்கம் பிரின்ஸ் வெங்கடேஸ்வரா கலை, அறிவியல் கல்லூரியின் மாணவ, மாணவிகள் 10 பேர் பல்கலைக்கழக அளவில் முதல் மதிப்பெண் பெற்ற தங்கப்பதக்கம் பெற்றனார்.

இதில், கலையரசி (எம்.காம்), பவித்ரா (பி.காம் – பைனான்ஸ்), சுதர்சனா (பி.காம்), ஸ்வேதா (எம்எஸ்சி கம்யூட்டர் சயின்ஸ்), தவமணி (எம்எஸ்சி பயோ கெமிஸ்ட்ரி), யோகலட்சுமி (பிஏ. ஆங்கிலம்), யோகேஸ்வரன் (பிசிஏ), துர்கா (பிஎஸ்சி – மைக்ரோபயாலஜி), லாவண்யா லட்சுமி (பிஎஸ்சி – பயோ டெக்னாலஜி), சித்ரா (பிஎஸ்சி – கம்ப்யூட்டர் சயின்ஸ்). இவர்களில் சுதர்சனா, ஜி.கலையரசி ஆகிய இருவர் ஜனாதிபதி திரவுபதி முர்மு கையால் தங்கப் பதக்கம் மற்றும் விருது பெற்றனர்.

மற்றவர்களுக்கு துணை வேந்தர் தங்கப் பதக்கம் மற்றும் விருதினை வழங்கினார். தங்கப்பதக்கம் பெற்ற மாணவர்களை பிரின்ஸ் கல்வி குழுமங்களின் தலைவர் டாக்டர் கே.வாசுதேவன், துணைத் தலைவர்கள் டாக்டர் வா.விஷ்ணு கார்த்திக், வா.பிரசன்ன வெங்கடேசன், கல்லூரி முதல்வர் எம்.உமா ஆகியோர் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.

The post சென்னை பல்கலை பட்டமளிப்பு விழாவில் பிரின்ஸ் கல்லூரி மாணவர்கள் 10 பேருக்கு தங்கப்பதக்கம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: