இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் ஆடி கடைசி வெள்ளி திருவிழா தொடக்கம்

சாத்தூர்: சாத்தூர் அருகே, இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளி திருவிழா கொடியேற்றத்துடன் இன்று காலை தொடங்கியது. இதில், ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே இருக்கன்குடியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கடைசி வெள்ளி திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு ஆடிப்பெருந்திருவிழா ஆக.11ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி இன்று காலை கொடியேற்றம் நடந்தது. முன்னதாக கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

இதில் அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி, கோயில் உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் (கூ.பொ), சாத்தூர் டிஎஸ்பி வினோஜி, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் நிர்மலா கடற்கரைராஜ், இருக்கன்குடி இன்ஸ்பெக்டர் மயிலு, ஊராட்சி மன்ற தலைவர்கள் (இருக்கன்குடி) செந்தாமரை, (என்.மேட்டுப்பட்டி) பாண்டியம்மாள் கருப்பசாமி, (கே.மேட்டுப்பட்டி) முத்துமாரியம்மாள் மாரிமுத்து, (நத்தத்துப்பட்டி) சூரியா பாண்டியன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். விழாவையொட்டி தினமும் மாரியம்மன் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா வருகிறார். வரும் 11ம் தேதி ரிஷப வாகனத்தில் அம்மன் வீதியுலா வருகிறார்.

The post இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் ஆடி கடைசி வெள்ளி திருவிழா தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: