தேனி: கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்துக்கு காரணமானவர்கள் யார் என்று ஜெ. தொண்டர்களுக்கு தெரியும் என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். ஓ.பி.எஸ். அணி சார்பில் தேனியில் நடைபெறும் போராட்டத்தில் டி.டி.வி.தினகரன் பேசினார். கட்சியில் நம்முடன் இருந்தவர்கள் 90 சதவீதம் பேர் நம்முடன்தான் இருக்கின்றனர். யாரோ ஒரு சிலர்தான் விலை போய் உள்ளதாக குற்றம்சாட்டினார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஆட்சி அதிகாரத்தில் இருந்ததால் சாட்சிகள் கலைக்கப்பட்டன என்றும் கூறினார்.
The post கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்துக்கு காரணமானவர்கள் யார் என்று ஜெ. தொண்டர்களுக்கு தெரியும்: டி.டி.வி.தினகரன் பேச்சு appeared first on Dinakaran.
