“அதிமுக தயவை ஏற்கும் கட்சியே ராமநாதபுரத்தில் வெற்றிபெறும்”: அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி பேச்சு

ராமநாதபுரம்: அதிமுக கூட்டணியின் தயவை ஏற்கும் கட்சியே ராமநாதபுரம் தொகுதியில் வெற்றிபெறும் என்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி கூறியுள்ளார். அதிமுக சார்பில் ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் மாநாடு நடைபெறவுள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, பல்வேறு தலைவர்கள் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியை குறிப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.

அதிமுக தயவை ஏற்கின்ற கூட்டணி ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெறும் என்றார் அவர். ராமநாதபுரம் நாடாளுமன்றம் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுவார் என தகவல்கள் பரவும் நிலையில், அதிமுக கூட்டணியின் தயவை ஏற்கும் கட்சிக்கே ராமநாதபுரம் தொகுதியில் வெற்றி பெறும் என கே.பி.முனுசாமி பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் அவை தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post “அதிமுக தயவை ஏற்கும் கட்சியே ராமநாதபுரத்தில் வெற்றிபெறும்”: அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: