வளையமாதேவி கிராமத்தில் வடிகால்வாய் வெட்டும் பணிக்காக துண்டிக்கப்பட்ட மின்சாரத்தால் விவசாய நிலம் பாதிப்பு

சேலம்: வளையமாதேவி கிராமத்தில் வடிகால்வாய் வெட்டும் பணிக்காக நேற்று மாலை துண்டிக்கப்பட்ட மின்சாரம் வழங்கப்படாததால் 50 ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது.

வளையமாதேவி கிராமத்தில் மின்சாரம் ரதுண்டிக்கப்பட்டதால் 50 ஏக்கர் விவசாய நிலத்தில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நெய்வேலி என்எல்சி நிறுவனம் 2வது நாளாக சுரங்க விரிவாக பணிக்காக வளையமாதேவி உள்ளிட்ட கிராமங்களில் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இதை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நிலத்தின் உரிமையாளர்களின் வீட்டில் ஒருவருக்கு என்எல்சி நிறுவனத்தில் வேலை வழங்க வேண்டும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமமக்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் என்எல்சி நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் வடிவதற்காக வடிகால் வெட்டும் பணியில் வளையமாதேவி பகுதியில் கடந்த 2 நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர். வடிகால் வெட்டும் பனி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்று வந்த நிலையில் தற்போது என்எல்சி நிறுவனம் நிறுத்தியுள்ளது.

என்எல்சி நிறுவனம் சார்பில் கொண்டுவரப்பட்ட ராட்சச இயந்திரங்கள் எளிதாக வரும் வகையில் உயர்மின் அழுத்தம் மற்றும் தாழ்வு மின்னழுத்த கம்பிகளை அகற்றி விடப்பட்டது. இந்நிலையில் துண்டிக்கப்பட்ட மின்சாரம் வழங்கப்படாததால் 50 ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

The post வளையமாதேவி கிராமத்தில் வடிகால்வாய் வெட்டும் பணிக்காக துண்டிக்கப்பட்ட மின்சாரத்தால் விவசாய நிலம் பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: