ஒரு மதத்தில் இருந்து சமூகத்தை வெளியேற்ற எந்த வக்பு வாரியத்திற்கும் அதிகாரம் இல்லை: அஹ்மதியா பிாிவை நீக்கிய விவகாரத்தில் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி பதில்

புதுடெல்லி: ஆந்திர பிரதேச வக்பு வாரியம், அங்குள்ள அஹ்மதியா சமூகத்தினர் முஸ்லீம்கள் இல்லை என்று அறிவித்தனர். பிரபல முஸ்லிம் அமைப்பான ஜமியத் உலமா-இ-ஹிந்த் இதை ஆதரித்து உள்ளது. இதுகுறித்த கேள்விக்கு ஒன்றிய சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறுகையில்,’ அனைத்து வக்பு வாரியங்களும் நாடாளுமன்ற சட்டத்தின் கீழ் தான் வரும். எனவே நாடாளுமன்றத்தின் கண்ணியத்திற்கு எதிராகவும், அதில் இயற்றப்பட்ட சட்டங்களை மீறும் வகையில், எந்த வக்பு வாரியமும் செயல்பட முடியாது.

பத்வாவை அரசு உத்தரவாக மாற்ற எந்த வக்பு வாரியத்திற்கும் அனுமதி இல்லை. நாடாளுமன்ற சட்டத்தின்படி, ஒரு நபரையோ அல்லது ஒரு சமூகத்தையோ மதத்திலிருந்து வெளியேற்ற எந்த வக்பு வாரியத்திற்கும் அதிகாரம் இல்லை. ஆந்திரப் பிரதேச தலைமைச் செயலாளரிடம் நாங்கள் பதில் கேட்டுள்ளோம். அஹ்மதியா முஸ்லிம் சமூகம் சிறுபான்மை விவகார அமைச்சகத்திடம் முறையிட்டதால், உண்மைகளை எங்கள் முன் வைக்குமாறு அவரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். ஆந்திர தலைமைச் செயலாளரின் பதிலுக்காக காத்திருக்கிறோம்’ என்று தெரிவித்தார்.

The post ஒரு மதத்தில் இருந்து சமூகத்தை வெளியேற்ற எந்த வக்பு வாரியத்திற்கும் அதிகாரம் இல்லை: அஹ்மதியா பிாிவை நீக்கிய விவகாரத்தில் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி பதில் appeared first on Dinakaran.

Related Stories: